Sunday, September 5, 2010

Maxim Gorky

உழைப்பும் துன்பமும் நிறைந்த வாழ்க்கைக்கு மாறான வேறு ஒரு

வாழ்க்கை உண்டு, அதில் இனிமை, கல்வி மனம் வீசும்.

அது நிச்சயமாக எங்கேயோ இருக்கிறது

- மாக்சிம் கார்க்கி


வாழ்க்கை ஒரு சிறைச்சாலை. இதில் நமக்கு இன்பமளிப்பதற்காக
பாடிக்கொண்டே
வரும் பறவைகள் புத்தகங்களே.
-
மாக்சிம் கார்க்கி



Saturday, June 26, 2010



கண்ணம்மா - என் காதலி


வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த இடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!....


தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா! மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே பாவை தெரியுதடீ!

(தீர்த்தக் கரையினிலே...)

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர் நகரத் துழலுவதோ?

(தீர்த்தக் கரையினிலே...)

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும் காவலுன் மாளிகையில்
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான் அங்கு வருவதற்கில்லை
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும் கூடிக் கிடக்கு தங்கே
நடுமை யரசி யவள் - எதற்காகவோ நாணிக் குலைந்திடுவாள்

(தீர்த்தக் கரையினிலே...)

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம் கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான் நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம் பண்ணிய தில்லையடி!

தீர்த்தக் கரையினிலே...

மகாகவி சுப்பிரமணிய பாரதி



விடியாத இரவு என்று எதுவும் இல்லை
முடியாத துயர் என்று எதுவும் இல்லை
வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை
வாடாத வாழ்க்கை என்று எதுவும் இல்லை
பிறக்காத ஈழம் என்று எதுவும் இல்லை
நிச்சயம் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்


நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி
யஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே;

Wednesday, June 23, 2010


"இன்று நாம் அனுபவிக்க துடிக்கும் சந்தோசத்தை நாளை அடுத்த தலைமுறையினர் அனுபவிக்க போராடி, அவர்களுக்கு பெற்று தருவதே நம்முடைய தார்மீக கடமை ஆகும்"

நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி!!
எந்த ஒரு எல்லைக்குள்ளும் அடங்காத, வரையறை இல்லாத காதல், ஒரு வகையில் மிக மோசமான வன்முறை தான்,,,,,,,